Welcome to Charity!

News

21-08-2019 News

டெல்லி நாட்டுக்காக உழைத்தவர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். அப்படிப்பட்டவரை வெட்கமே இல்லாமல் வேட்டையாடுகிறார்கள் கோழைகள் என்று பிரியங்கா காந்தி ஆவேசமாக கூறியுள்ளார். ப.சிதம்பரத்தைக் கைது செய்ய சிபிஐ துடியாய் துடித்துக் கொண்டுள்ளது. மறுபக்கம் அமலாக்கப் பிரிவும் விசாரணைக்காக காத்துள்ளனர். நடுவில் ப.சிதம்பரம் மாயமாகி விட்டார். 2 மணி நேரத்தில் அவர் ஆஜராக வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. அவரது முன்ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டும் கூறி விட்டது. இந்த நிலையில் ப.சிதம்பரம் விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.