Loginnn
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ கேட்கும் எந்த கேள்விக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு இந்த நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Login